கிண்ணியா உணவகத்தில் சுகாதார சிக்கல்: 16 பேர் வைத்தியசாலையில்!

#SriLanka #Trincomalee #Health #Kinniya
Lanka4
7 hours ago
கிண்ணியா உணவகத்தில் சுகாதார சிக்கல்: 16 பேர் வைத்தியசாலையில்!

நேற்று(22.07.2025) இரவு கிண்ணியாவில் BBQ உணவகத்தில் சுட்ட கோழி சாப்பிட்ட காரணத்தால் இன்று காலை கிண்ணியா தள வைத்தியசாலையில் 16 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். 

இதனை அறிந்த கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.AMM. அஜித் அவர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உரிய இடத்திற்கு சென்று உணவகத்தை உடனே மூடி உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதனை கொழும்பு MR பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நபர்களுடான முதல் கட்ட விசாரணையில் இவர்கள் உண்ட சுட்ட கோழி மற்றும் Mayonnaise கலவை ஒவ்வாமை காரணமாக வயிற்றோட்டம், வாந்தி, தலைசுற்றல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 26 பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். 

எனவே இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் வைத்திய ஆலோசனை பெறவும் மற்றும் பொது மக்கள் சுட்ட கோழி விடையத்தில் அவதானமாக இருக்கும் படி MOH அவர்கள் கருத்து தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753222781.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!