ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் அவசியமாக்கப்படும் - பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க
#SriLanka
#School
#government
#Teacher
#Permission
Prasu
6 hours ago

ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப் பத்திரம்
கட்டாயமாக்கப்படும். இந்த இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும். அரச
பாடசாலையில் அல்லது சர்வதேசப் பாடசாலையில் அல்லது டியுசனில் அல்லது வேறு
கற்பித்தல் பணியில் ஈடுபடுவதற்கு கட்டாயமாக அனுமதிப் பத்திரம் பெறல்
வேண்டும். உருவாக்கப்படவுள்ள ஆசிரியர் சபை இதனை வழங்கும்.
தற்போது பின்வரும் தொழில் ஈடுபட தங்களைப் பதிவு செய்து அனுமதிப் பத்திரம் பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவர்கள் -GMO
- பொறியியலாளர்கள் -IESL
- சட்டத்தரணிகள். - BAR council
இதேபோல் புதிய கல்வி சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தும் போது, ஆசிரியர் சபை மூலம் ஆசிரியர்களுக்கு கற்றல் அனுமதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக பிரதி அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார் என முகநூல் பக்கத்தில் செய்தி உலாவி வருகிறது.இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டால், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலின் விளைதிறன் எதிர்பார்த்த மட்டத்தை விட உயர்ந்த மட்டத்தில் காணப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் செயலாற்றுகை எதிர்பார்த்த மட்டத்தை விட குறைவாக இருப்பின், கற்பித்தல் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க முடியாமல் போகும்.
இதைவிட ஆசிரியர் ஒழுக்கக் கோவையின் விதிகளை கடைப்பிடிக்கத் தவறும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க முடியாமல் போகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



