வவுனியாவில் தனியார் பேருந்து நடத்துநரிடம் மாணவர்கள் வாக்குவாதம்!

#SriLanka #Bus #students
Lanka4
5 hours ago
வவுனியாவில் தனியார் பேருந்து நடத்துநரிடம் மாணவர்கள் வாக்குவாதம்!

வவுனியாவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான NG 2329 ராதிகா டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர் மாணவர்களிடம் தகாத பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை (21) 8.20 மணியளவில் வவுனியா - நொச்சிமோட்டை பகுதிக்கு வகுப்புக்கு செல்ல இருந்த மாணவர்களை குறித்த பேருந்தில் ஏற்றி செல்வதற்கு பேருந்து நடத்துநர் அனுமதிக்காது மாணவர்களுடன் தகாத பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். 

அதன்பின்னர் மாணவர்கள் எங்களிற்கு வகுப்பிற்கு நேரம் சென்று விட்டது என்று கேட்ட போதும் “உங்களை ஏற்றுவதற்கு இந்த பஸ் ஓடவில்லை” என்று தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து மாணவர்களை ஏற்றாமல் சென்றுள்ளார்.

மாணவர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டது மட்டுமன்றி அவர்களை வகுப்பிற்குச் செல்வதற்கு பேருந்தில் ஏற்றாமல் சென்றுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவர்கள் அனைவரும் இணைந்து தனியார் பேருந்தின் நடத்துநருக்கு எதிராக வடக்கு மாகாண போக்குவரத்து சபைக்குக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். 

கடிதத்தில் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை உள்ளடக்கி இதற்கு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்தது மாணவர்களின் கல்வியைக் கருத்திற்கொள்ளாமல் அவர்களுடன் தகாத வார்த்தைகளில் ஈடுபட்டதை குறித்த பேருந்து நடத்துநருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753047536.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!