பேலியகொடவில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #lanka4Media #gun #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
1 month ago
பேலியகொடவில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பேலியகொட பகுதியில் கிரிபத்கொட பொலிஸாரால் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) மாலை கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

T-56 துப்பாக்கி, 30 தோட்டாக்களுடன் கூடிய ஒரு மகசின் மற்றும் 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை அவரிடம் இருந்து மீட்கப்பட்டன.

சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

எனினும், குறித்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், பின்னர் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்றும், அவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்காக துப்பாக்கியுடன் வந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753047536.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!