செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

#SriLanka #Jaffna #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 day ago
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று 7 மனித எலும்புக்கூடுகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 10ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

 இதன்போது தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றில் 4 மனித எலும்புக்கூடுகளும், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் 3 மனித எலும்புக்கூடுகளுமாக மொத்தமாக 7 மனித எலும்புக்கூடுகள் இன்று பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 16 வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 இதுவரை 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753047536.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!