காதலனை காப்பாற்ற முயன்று நீரில் காணாமல் போன பல்கலைக் கழக மாணவி!

மஹியங்கனை பொலிஸ் பிரிவில் 17ஆவது கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் கால் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கால்வாயில் நீர் ஓட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், குறித்த இருவரும் கால்வாய் ஓரமாக நடந்துச் சென்றனர். அப்போது அந்த இளைஞன் திடீரென தவறி விழுந்துள்ளார்.
அந்த நேரத்தில், அவரது காதலி அவரைக் காப்பாற்ற கையை நீட்டியுள்ளார், பின்னர் அவரும் கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.
பின்னர், அப்பகுதி ஊடாக மஹியங்கனை பொலிஸ் பயிற்சிப் பாடசாலைக்கு சென்ற அதிகாரியும் அவரது மனைவியும் விரைந்து செயற்பட்டு கால்வாய்க்குள் குதித்து இளைஞனைக் காப்பாற்றினர், ஆனால் அவர்களால் அந்த யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லை.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயது மாணவியே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் இறக்கிவிடுவதற்காக சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



