புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு மரண தண்டனை வேண்டும்! கொழும்பு பேராயர்

#SriLanka #Colombo #Lanka4
Mayoorikka
9 hours ago
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு மரண தண்டனை  வேண்டும்!  கொழும்பு பேராயர்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் அண்மையில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டவருமான நிலந்த ஜயவர்தனவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 கொழும்பு பேராயர் அலுவலக ஊடகப் பிரதானி ஜூட் கிரிசாந்த அருட்தந்தை இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் போது கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் நிலந்த சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நிலந்தவிற்கு ஆயுள் தண்டனையை விடவும் மரண தண்டனையே பொருத்தமானது என்பது தமது நிலைப்பாடு என அருட்தந்தை ஜூட் தெரிவித்துள்ளார்.

 நாட்டின் மூன்று ஜனாதிபதிகள் நிலந்தவை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்துள்ளார்.

 குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற தகவல் அறிந்திருந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரைக் கூட நியமிக்காது வெளிநாடு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753047536.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!