பனஹடுவ ஏரியில் ஒருவரின் சடலம் மீட்பு!

#SriLanka #Death #Body
Lanka4
4 hours ago
பனஹடுவ ஏரியில் ஒருவரின் சடலம் மீட்பு!

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடவளவை பனஹடுவ ஏரியில் டியூப் ஒன்றின் உதவியுடன் இரண்டு நபர்கள் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, பனஹடுவ பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களும் நீரில் மூழ்குவதை அவதானித்த நபர் ஒருவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய உயிர் காக்கும் பிரிவு மற்றும் இராணுவத்தின் நீச்சல் வீரர்கள் விரைந்து இருவரையும் தேடும் பணியை ஆரம்பித்த நிலையில், ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், காணாமல் போன மற்றொருவரின் உடலை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753047536.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!