மன்னார் இளைஞனுக்கு ஐரோப்பாவில் கிடைத்த அதிஷ்டம்!

#SriLanka #Mannar #European
Lanka4
4 hours ago
மன்னார் இளைஞனுக்கு ஐரோப்பாவில் கிடைத்த அதிஷ்டம்!

மன்னார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞரே ஐரோப்பாவில் விமானி உரிமத்தைப் பெற்றுள்ளார். 

குறித்த இளைஞன் தனது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றார். தொடர்ந்து உயர்கல்விக்காக பின்லாந்து சென்று அங்கு மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 

மேலும் ஸ்பெயினின் பர்கோஸ் நகரில் உள்ள FLYBY AVIATION ACADEMY யில் இணைந்து ஏர்லைன் போக்குவரத்து விமான உரிமத்தில் ஒருங்கிணைந்த பாடநெறியில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் விமானங்களுக்கான வணிக விமானி உரிமத்தைப் பெற்றுக் கொண்டார். மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு தலைமை விமானியாக செயற்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது இலங்கைக்கும் மன்னாருக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753047536.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!