பலத்த காற்றால் முறிந்த பாரிய மரம்: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

மலையக பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இன்று அதிகாலை ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ரொசெல்ல பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று, அதிகாலை 4:00 மணியளவில் பிரதான வீதியில் விழுந்ததால், அதிகாலை 5:00 மணி வரை வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. வட்டவளை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மரம் வெட்டப்பட்ட பின்னர், வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிலவும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, ஹட்டன்-கொழும்பு மற்றும் ஹட்டன்-கண்டியின் பிரதான வீதிகள் மற்றும் ஏனைய சிறு வீதிகளிலும் மரங்கள் மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அந்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது கவனமாக வாகனம் ஓட்டுமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வாகன சாரதிகளை கேட்டுக்கொள்கிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



