யாழ்.வடமராட்சி வத்திராயனில் மண்ணில் புதைந்திருந்த எறிகணை மீட்பு

#SriLanka #Jaffna #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
5 hours ago
யாழ்.வடமராட்சி வத்திராயனில் மண்ணில் புதைந்திருந்த எறிகணை மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை (18) வெடிக்காத நிலையில் மண்ணில் புதைந்திருந்த எறிகணை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

 இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தபோது மண்ணில் புதைந்திருந்த நிலையில் எறிகணை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில், உடனடியாக கட்டுமான வேலைகளை நிறுத்திவிட்டு சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் குறித்த எறிகணையை கைப்பற்றியுள்ளனர். 

 இது யுத்த காலத்தில் ஏவப்பட்ட எறிகணையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!