கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் காற்றாடிகளை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
#SriLanka
#Airport
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் காற்றாடிகளை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு விமான நிலைய மேலாண்மைப் பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதைப் புறக்கணிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். அருண ராஜபக்ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில், "விமான நிலையத்தைச் சுற்றி காற்றாடிகளை பறக்கவிடுவது விமானங்களுக்கும் விமானப் பயணிகளின் உயிருக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றாடிகளை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 300 அடிக்கு மேல் காற்றாடிகளை பறக்கவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
