ராஜித நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு நிராகரிப்பு

#SriLanka #Court Order #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
2 months ago
ராஜித நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த  முன்பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

 கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் டொக்டர் ராஜித, சட்டத்தரணி ஊடாக முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தன்னை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி இந்த முன்பிணை மனுவை ராஜித தாக்கல் செய்திருந்தார்.

 மனுதாரர் சார்பான வாதங்களையும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் வாதங்களையும் கவனத்திற் கொண்டதன் பின்னர் கொழும்பு பிரதம நீதவான் லக்மாலி ஜயதுங்க முன்பிணை மனுவை நிராகரித்துள்ளார். 

 அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்திற்கு பெருந்தொகை நட்டம் ஏற்படும் வகையில் செயற்பட்டதாக டொக்டர் ராஜித மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752826356.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!