சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் கைது

#SriLanka #Arrest #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 hours ago
சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் கைது

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார்.

 ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த குறித்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பயனனின்றி இரண்டாம் மாதம் 16 ஆம் திகதி உயிரிழந்தார். இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 

 இந்நிலையில் இறந்த தமிழினியின் பெற்றோர் தரப்பில் கணவரான கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சதீஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752826356.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!