வெள்ளை வானில் கடத்தப்பட்ட மாணவன் - பிலியந்தலையில் சம்பவம்!
#SriLanka
#Missing
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

பிலியந்தலையில் பாடசாலை மாணவர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பாடசாலையில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் நேற்று (16.07) மாலை 04.00 மணியளவில் மேலதிக வகுப்புக்கு சென்றபோது கடத்தப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பதினைந்து வயது மாணவன் இரத்தினபுரி பகுதியில் வெள்ளை வானில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கஹதுடுவ பொலிஸார் வானையும் சிறுவனை கடத்தியதாகக் கூறப்படும் நபர்களையும் கைது செய்வதற்காக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




