நாடு முழுவதிலும் காணியற்றோருக்கு காணி உரிமம்! 500 திட்டங்கள் ஒதுக்கீடு

#SriLanka #Lanka4 #land #SHELVAFLY
Mayoorikka
4 hours ago
நாடு முழுவதிலும் காணியற்றோருக்கு காணி உரிமம்! 500 திட்டங்கள் ஒதுக்கீடு

நாடு பூராவிலும் உள்ள காணி உரிமையற்ற ஐம்பதாயிரம் பேருக்கு (50,000) இவ்வருடத்திற்குள் காணி உறுதிகள் அல்லது அனுமதிப் பத்திரங்களை வழங்கவும் விவசாயம் உள்ளிட்ட 500 பல்வேறு கருத்திட்டங்களுக்காக காணிகளை ஒதுக்கீடுசெய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 அதன்படி காணிச்சீர்திருத்த ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை மற்றும் காணி ஆணையாளரின் கீழுள்ள 500 காணித்துண்டுகள் இவ்விதமாக விவசாயத்தை உள்ளிட்ட பல்வேறு கருத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். 

 அத்துடன் இந்நாட்டில் காணி உரிமையற்ற இலட்சக்கணக்கானோர் இருப்பதாகவும் காணி உரிமையற்ற மக்களுக்கு காணி உறுதிகள் அல்லது அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இந்த மாத இறுதியில் கிளிநொச்சியில் தொடங்கிவைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752653682.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!