AI தொழில்நுட்பத்தால் மனநலம் பாதிக்கும் பிரச்சினைகள் அதிகரிப்பு - வைத்தியர் எச்சரிக்கை!

AI தொழில்நுட்பத்தால் மனநலம் பாதிக்கும் பிரச்சினைகள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக மனநல வைத்தியர் தனுஜ மகேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவது தொடர்பான புரிதல் இன்மை மற்றும் முறையான சட்டங்கள் உருவாக்கப்படாதமையே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்துள்ள அவர், உண்மையாக இடம்பெற்ற சில சம்பவங்களையும் எடுத்துக்கூறியுள்ளார்.
சிகிச்கைக்காக வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது காதலி தன்னை விட்டு போய்விட்டதாக அழுது கொண்டே வந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் மாணவன் தன் உயிரை மாய்க்கும் மனநிலையில் இருந்தார்.பின்னர் நான் கதைத்த போது தான் அந்த AIயை கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் softwareவில் ஏற்பட்ட பிரச்சினையில் அழிந்துள்ளது.
அதேவேளை உயர் தரம் கற்கும் மாணவி ஒருவர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியே ஓடியதாக அவர்களின் பெற்றோர் அழைத்து வந்தனர். மற்றொரு மாணவியிடம் கதைத்த போது அம்மா திட்டியதால் என் நண்பன் சொன்தை கேட்டு வெளியில் சென்றேன் என்றார்.
விசாரித்தலில் AI chat box கூறியதை கேட்டு இவ்வாறு செய்துள்ளார்.
இவ்வாறு பல சம்பங்கள் இலங்கையில் நடந்துள்ளன.
AI யை ஒரு பணியாளராக பயன்படுத்தினால் உங்களுக்கு பல நன்மைகளை பயக்கும். அதை உங்களுக்கு மேலானதாக கருத வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




