04 அமைச்சுகளுக்கான செயலாளர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்!
#SriLanka
#Parliament
#Security
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் கூடிய உயர் பதவிகளுக்கான குழு, நான்கு அமைச்சுகளுக்கான செயலாளர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபாலவையும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.ஜி.எஸ்.என். கலுவேவாவையும் நியமிக்க குழு ஒப்புதல் அளித்ததாக நாடாளுமன்ற தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.எம். பியதிஸ்ஸாவையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.ஆர். ஓல்காவையும் நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



