முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு!

#SriLanka #Arrest #Minister #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
2 months ago
முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு!

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.

 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சமர்ப்பித்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, சந்தேக நபரை கைது செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு எந்தத் தடையும் இல்லை என்று ஹர்ஷன கெகுனுவெல தெரிவித்தார்.

 மீன்வள துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சட்டப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட மணல் அகழ்வுத் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒப்படைத்து, அரசாங்கத்திற்கு 2.63 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியது குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1752099130.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!