அமெரிக்க வரி! பல்வேறு பங்குதாரர்களுடன் தீவிர பேச்சுவார்த்தை

#SriLanka #America #taxes #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 day ago
அமெரிக்க வரி! பல்வேறு பங்குதாரர்களுடன்  தீவிர பேச்சுவார்த்தை

அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

 இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு பல்வேறு பங்குதாரர்களுடன் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே இந்த வரிக்குறைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 அதன் அடிப்படையில் அமெரிக்கா, ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்த 44 சதவீத வரியை மறுசீரமைத்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 30 சதவீத வரி மட்டுமே விதிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

 மேலும், 30% வரி தொடர்பில் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை அமெரிக்காவுடன் மேலதிக கலந்துரையாடல்கள் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752099130.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!