"தகவல் உரிமை சட்டத்தில் மூன்று முக்கிய தீர்ப்புகள்"

#SriLanka #information #ImportantNews
Lanka4
1 day ago
"தகவல் உரிமை சட்டத்தில் மூன்று முக்கிய தீர்ப்புகள்"

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம் என்பது மக்களின் கையில் இருக்கும் மிகக் கூர்மை வாய்ந்த ஓர் ஜனநாயக ஆயுதமாகும். இச்சட்டம் இலங்கையில் மிக அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் முதன் முதலாக இது சுவீடன் நாட்டில் 1766 ஆம் ஆண்டு Freedom of the Press Ordinance என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமை தொடர்பான சட்ட ஏற்பாடுகளில் உறுப்புரை 14 (A) (1) பின்வருமாறு உட்சேர்க்கப்பட்டது “Every citizen shall have the right of access to any information as provided for by law” அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரிப்பணம் செலுத்தும் நாட்டு மக்கள் இச்சட்டத்தை இயன்றவரை பயன்படுத்திப் பலன் பெற வேண்டும். அதே போல், உரிய அதிகாரிகளும் தகவலை மறைக்காமல், மழுப்பாமல் முழுமையாக வழங்க முன் வர வேண்டும்.

தகவல் அலுவரின் (Information Officer) தீர்மானத்தில் அதிருப்தியுறும் திறத்தவர் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கும் (Designated Officer) குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்தில் அதிருப்தியுறும் திறத்தவர் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவுக்கும் (Right to information Commission) தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தில் அதிருப்தியுறும் திறத்தவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் (COURT OF APPEAL OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA) மேன்முறையீடுகளைச் செய்யலாம்.இத்தனை மேன்முறையீடு வாய்ப்புகளும் காணப்படுவது மக்களின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்காகத்தான் என்றால் மிகை ஆகாது. 

2025.07.03 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தகவலுக்கான உரிமைச் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

https://courtofappeal.lk/?melsta_doc_download=1&doc_id=b3f2c422-6259-4278-9fc3-f54bc26cc7df&filename=RTI%2002-23%20FINAL.pdf.pdf


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!