இலங்கைக்கு 30% வரி - இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் நிலைப்பாடு!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 30% பரஸ்பர வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அத்துடன், இலங்கை தனது வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால், அதே சதவீதம் தற்போதுள்ள 30% வரியில் சேர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த 44% வரியை 30% ஆகக் குறைப்பது ஒரு நேர்மறையான அணுகுமுறை என்று வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
பட்டியலிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் இலங்கைக்கு மிகப்பெரிய கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சுட்டிக்காட்டுகிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராஜதந்திர ஈடுபாட்டின் விளைவாக இது ஏற்பட்டதாக துணை அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



