நகரின் மத்தியிலே நீச்சல் தடாகம்… ஆனால் மாணவர்கள் தண்ணீருக்குள் காணப்படாதது ஏன்?

#SriLanka #Student #Kilinochchi #Swimming_Pool
Lanka4
15 hours ago
நகரின் மத்தியிலே நீச்சல் தடாகம்… ஆனால் மாணவர்கள் தண்ணீருக்குள் காணப்படாதது ஏன்?

வடமாகாணத்தில் ஒரே ஒரு போட்டிக்குரிய நீச்சல் தடாகம் கிளிநொச்சியிலே காணப்படுகின்றது . 

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து பாடசாலை மாணவர்கள் 100, 200 என்று பாடசாலை மாகாண மட்ட நீச்சல் போட்டிக்காக கிளிநொச்சி நகர் முழுவதும் அலங்கரிக்க....எங்கே கிளிநொச்சி மாவட்டத்தின் மாணவர்கள் என்று கண்கள் தேடினால், மிஞ்சுவது வெறும் கண்ணீர் மட்டுமே ... வெறும் பத்து பேருக்குள் அடங்கி விட்டது எம் மாவட்டம்....(ஆனால் அவர்களுக்குள் பலர் முதல் இடம் ).

அஞ்சல் நீச்சலுக்கு நான்கு பேர் இல்லாமல் எந்த ஒரு வயதுப்பிரிவும் கலந்துகொள்ளவில்லை...இது தான் எங்கள் கிளிநொச்சியின் தற்போதைய நிலை... இந்த நீச்சல் தடாகத்தின் அருகில் தடக்கி விழும் தூரத்தில் பெரிய பாடசாலைகள் இருப்பதும் இன்னும் வேதனை.

பெற்றோர்கள் தனியார் வகுப்புக்கு பிள்ளைகளை ஏத்தி இறக்கி கொள்வது போல இதுபோல் மிகவும் தேவையான விளையாட்டினை பிள்ளைகளுக்கு பழக்கி விடுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் என்றாலும் அவர்களின் உடல்நலன் கருதி ஏதாவது விளையாட்டுக்கு அனுப்புங்கள்...அவர்களுக்கும் எம் மாவட்டத்துக்கும் பயன் கிடைக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!