நெல்லை வீதிகளில் பரவுதல் சரியா??

இது உணவுப் பொருள் மட்டும் அல்ல சமய நிகழ்வுகளுக்கும் சடங்குகளுக்கும் நெல்லை அப்படியே பயன்படுத்துகிறோம் அப்படிப் பயன்படுத்துகின்ற புனிதமான நெல்லை இப்படிக் குப்பை வீதிகளில் போடலாமா?
ரயர்களின் தேய்மானத்தில் வெளியாகின்ற ரப்பரும் தாரில் இருந்து வெளியேறுகின்ற பெட்ரோலியக் கழிவும் இந்நெல்லில் சேர்க்கிறது இதை அப்படியே அவிக்கும் பொழுது அது அந்த அரிசியோடு ஒட்டி விடும் என்கின்ற அறிவு கூடவா மக்களுக்கு இல்லை? நஞ்சை உண்ணப் போகின்றோம் என்கின்ற சிந்தனை கூடவா இல்லை? இப்படி வீதியில் போடுவது போக்குவரத்து விதிகளை மட்டுமல்ல நெல்லின் மகத்துவத்தையும் மதிக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.
வீதியிலே நெல்லைக் காய வைக்கும் விவசாயிகள் இதனால் எவ்வளவு ஆபத்து இவர்கள் போக்குவரத்து விதிகளையும் மதிக்கவில்லை அதேவேளை மற்ற உயிர்களைப் பற்றியும் கவலையில்லை.
கடும் மழை நேரம் இதைச் செய்திருந்தால் கூட பரவாயில்லை நல்ல வெயில் காலத்தில் இப்படி செய்வது எந்த வகையில் நியாயம்? ஏன் இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்பது புரியவில்லை!
நெல்லை காய வைக்க என்று அரசால் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் அதைக் கேட்டு ஒழுங்கு செய்து கொள்ள வேண்டும் அல்லது பெற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படி வீதியில் போடுவது போக்குவரத்து விதிகளை மட்டுமல்ல நெல்லின் மகத்துவத்தையும் மதிக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.



