முன்னாள் போராளி நலன்புரி சங்க தலைவர் அரவிந்தன் பிணையில் விடுதலை!

#SriLanka #Prison #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
4 hours ago
முன்னாள் போராளி நலன்புரி சங்க தலைவர் அரவிந்தன் பிணையில் விடுதலை!

முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவர் ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கபட்டிருந்தார்.

 இறுதியாக இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டது. கடந்த 2024 மார்ச் மாதம் அவர் கைதாகி இருந்தார். 2024 ஜூன் அளவில் தனது விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 கடந்த மாதம் மக்கள் பேரவையின் இயக்கத்தின் சார்பாக நீதி அமைச்சரை சந்திக்கும் போது அரவிந்தனின் விடுதலையை பற்றிய அத்தனை விடயங்களையும் அவருக்கு கூறினேன் அவர் சாதகமான விடயங்களையே கூறினார். 

 ஆனாலும் பின்னர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக மூன்று வழக்குகள் வர நம்பிக்கையீனம் ஏற்பட்டது. அவரது உறவினர்கள் சிலர் பல காலமாக என்னோடு தொடர்பில் உள்ளார்கள் அவர்களின் நிலையை நான் அறிவேன். அரவிந்தனின் வழக்கை கடந்த ஒரு வருடமாக செய்யும் சட்டத்தரணிகள் ரட்ணவேல் மற்றும் சட்டத்தரணி ரனிதா ஆகியோருக்கும் முதன்மையான நன்றிகள்.

 கடந்த மாதம் பாராளுமன்றத்தில் விடுதலையை வலியுறுத்திய கஜேந்திரகுமார் அவர்களுக்கும் நன்றிகள். பயங்கரவாதச் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் அதில் கைதாகி இருப்பவர்கள் விடுதலையாக வேண்டும், நீண்டகால அரசியல் கைதிகள் விடுதலைக்காக வேண்டும்.

 பகிர்வு நன்றி

 Rajkumar Rajeevkanth.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751148871.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!