SLvsBAN - 247 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் அணி

#SriLanka #Test #Cricket #Bangladesh
Prasu
2 months ago
SLvsBAN - 247 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் அணி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகிறது. 

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, சற்றுமுன்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

பங்களாதேஷ் அணி சார்பாக ஷட்மன் இஸ்லாம் 46 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்ணான்டோ மற்றும் தினுஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்ணான்டோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750928097.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!