அமெரிக்காவில் தம்பியை கொலை செய்ததாக 11 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

#Arrest #Murder #children #America #Brother #L4
Prasu
3 months ago
அமெரிக்காவில் தம்பியை கொலை செய்ததாக 11 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

கொலராடோவில் தனது ஐந்து வயது தம்பியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 11 வயது சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலராடோவின் டென்வர் புறநகர்ப் பகுதியான சென்டெனியலில் உள்ள ஒரு வீட்டில், மார்ச் 11 அன்று அந்த ஐந்து வயது சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுவனின் சகோதரன் என்றும் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது என்றும் அரபஹோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் கடந்த வாரம் தெரிவித்தது.

"பாதிக்கப்பட்ட சிறுவனும் சந்தேக நபரும் சிறார்கள் என்பதால் நாங்கள் வெளியிடும் தகவல்கள் குறைவாகவே இருக்கும்" என்று ஷெரிப் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த 11 வயது சிறுவன் மீது முதல் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 18வது நீதித்துறை மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4