இந்தியர்கள் குறித்து சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

#Switzerland #Bank #money #Indian
Prasu
11 months ago
இந்தியர்கள் குறித்து சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் ஏராளமான அளவில் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. 

அந்த வகையில், தற்போது 2024ஆம் ஆண்டில் மட்டும் மூன்று மடங்கிற்கும் மேலாக, இந்தியர்களின் பணம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

SNBயின் கணக்கின்படி, 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்குளை எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.37,600 கோடி ஆகும். இது 2021ஆம் ஆண்டில் இருந்து மிக உயந்த நிலை என்று கூறப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வைப்புத்தொகை மிதமாக உயர்ந்தது - 11 சதவீதம் அதிகரித்து 346 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக இருந்தது.

எனினும், செய்தி நிறுவனமான PTI வெளியிட்ட ஒரு அறிக்கையில், பெரும்பாலான அதிகரிப்பு வங்கி வழிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம் வைத்திருக்கும் நிதியில் இருந்து வந்தது என்றும், தனிப்பட்ட வாடிக்கையாளர் கணக்குகள் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750407607.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4