தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

#PrimeMinister #Protest #people #Resign #Thailand
Prasu
1 year ago
தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் பதவி விலகக் கோரி பேங்காக் வீதிகளில் ‘மஞ்சள் சட்டை’ அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அண்மையில் பிரதமர் ஷினவாத் கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்று சமூக ஊடகத்தில் கசிந்தது. அந்த உரையாடலில் ஷினவாத் சென்னை ‘அங்கிள்’ என்று அழைத்தார். 

மேலும் தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவத் தளபதியைத் தமது எதிரியென ‌ஷினவாத் குறிப்பிட்டார். இந்த உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து நூற்றுக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கு அருகே திரண்டு போராட்டம் நடத்தினர். ஷினவாத்திடம் பிரதமருக்கு உண்டான தகுதிகள் ஏதும் இல்லை என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750364623.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4