பிரான்ஸ் முன்னாள் பிரதமருக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை

#PrimeMinister #Arrest #France #Court Order #Fraud
Prasu
11 months ago
பிரான்ஸ் முன்னாள் பிரதமருக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை

மனைவி பெயரில் மோசடி செய்த பிரான்ஸ் முன்னாள் பிரதமருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் முன்னாள் பிரதமரான ஃப்ராங்கோயிஸ் ஃபில்லோன் தனது மனைவியான பெனலோபிக்கு நாடாளுமன்ற உதவியாளர் என்னும் பணியை வழங்கியிருந்தார். 

ஆனால், பெனலோபி நாடாளுமன்றத்தில் எந்த பணியும் செய்யவில்லை. என்றாலும், மக்கள் வரிப்பணத்திலிருந்து அவருக்கு பல மில்லியன் யூரோக்கள் ஊதியம் வழங்கப்பட்டது. 

மோசடி மூலம் பணம் பார்த்த ஃபில்லோனுக்கு, 2022ஆம் ஆண்டு, ஓராண்டு சிறைத்தண்டனையும், 375,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.

தனது தண்டனையை எதிர்த்து ஃபில்லோன் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. முந்தைய தீர்ப்பின்படி அவர் ஒரு ஆண்டாவது சிறையில் செலவிட்டிருக்கவேண்டும். 

இப்போதைய தண்டனையோ, suspended prison sentence என்னும் முறையிலான தண்டனை. அதாவது, நான்கு ஆண்டுகளுக்கு ஃபில்லோன் மீண்டும் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே அவர் சிறையிலடைக்கப்பட்டுவார். அதுவரை அவர் சுதந்திரமாக வெளியில் நடமாடலாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750325718.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4