ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் ஜெனீவாவில் இந்திய உணவகங்களில் சோதனை

#Arrest #Police #Switzerland #Hotel #migrants #Indian
Prasu
1 year ago
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் ஜெனீவாவில் இந்திய உணவகங்களில் சோதனை

ஆட்கடத்தல் நடந்திருப்பதாக சந்தேகத்தின்பேரில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்திய உணவகங்களைக் சோதனை நடத்தப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள இந்திய உணவகங்கள் பலவற்றில் பொலிசார் சோதனை நடத்தியுள்ளார்கள். 

சோதனை தொடர்ந்து, ஆட்கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். பொலிசார் நடத்திய விசாரணையில், உணவகங்களில் வேலை செய்வதற்காக சட்டவிரோதமாக சிலர் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

அப்படி அழைத்துவரப்பட்டவர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளதுடன், வரி செலுத்துவது மற்றும் அரசு உதவி பெறுவதற்காக அவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்படாமலும் விடப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இந்தியாவுக்கு தப்பிவிடக்கூடும் என கருதப்படுவதால், அவர்கள் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750234598.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4