பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது கட்டாயமாக்கப்படும்!
#SriLanka
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கத்தில் கூட்டுத் திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இம்மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன இயக்கத்தில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
