ஜேர்மன் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி!
#SriLanka
#Germany
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 months ago

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (15) காலை இலங்கைக்கு வருகை தந்தார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் இன்று காலை 08.58 மணிக்கு தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



