வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 22 (May 22)

#people #history #Lanka4 #World
Prasu
6 hours ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 22 (May 22)

கிரிகோரியன் ஆண்டின் 142 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 143 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 760 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது.
  • 1200 – இங்கிலாந்தின் ஜான் மன்னரும், பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னரும் நார்மாண்டி போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
  • 1254 – பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
  • 1370 – பிரசெல்சு நகரில் பெருந்தொகையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து யூத சமூகம் அங்கிருந்து வெளியேறியது.
  • 1455 – ரோசாப்பூப் போர்கள் ஆரம்பம்: சென் அல்பான்சில் இடம்பெற்ற முதல் சமரில், யோர்க் கோமகன் ரிச்சார்டு இங்கிலாந்து மன்னர் ஆறாம் என்றியைக் கைது செய்தார்.
  • 1629 – முப்பதாண்டுப் போரில் டென்மார்க்கின் தலையீட்டைத் தவிர்க்க, புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பெர்டினான்டுக்கும், டென்மார்க் மன்னர் நான்காம் கிறித்தியானுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
  • 1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
  • 1816 – இங்கிலாந்து, லிட்டில்போர்ட் என்ற இடத்தில், அதிக வேலையின்மை, மற்றும் தானிய விலை ஏற்றம் ஆகியவற்றுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.
  • 1834 – இலங்கை சட்டவாக்கப் பேரவையின் முதலாவது கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது.[1]
  • 1840 – நியூ சவுத் வேல்சுக்கு (இன்றைய ஆத்திரேலியாவின் மாநிலம்) பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
  • 1848 – மர்தீனிக்கில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
  • 1856 – தென் கரொலைனாவின் அமெரிக்கக் காங்கிரசு உறுப்பினர் பிரெஸ்டன் புரூக்சு மாசச்சூசெட்ஸ் மாநில செனட்டர் சார்ல்சு சம்னரை அமெரிக்காவில் அடிமைத்தொழில் பற்றி உரையாற்றியமைக்காக மேலவை மண்டபத்தில் வைத்து பிரம்பால் கடுமையாக அடித்தார்.
  • 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் ஆட்சன் துறைமுகம் மீதான தமது 48-நாள் முற்றுகையை ஆரம்பித்தன.
  • 1900 – அசோசியேட்டட் பிரெசு நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
  • 1915 – இசுக்கொட்லாந்தில் மூன்று தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர்.
  • 1926 – குவோமின்டாங் சீனாவில் சங் கை செக் பொதுவுடைமைவாதிகளை பதவியில் இருந்து அகற்றினார்.
  • 1927 – சீனாவில் சினிங் அருகே 8.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
  • 1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி, இத்தாலி இரும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • 1941 – ஆங்கில-ஈராக்கியப் போர்: பிரித்தானியப் படைகள் பலூஜா நகரைக் கைப்பற்றின.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
  • 1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தைக் கலைத்தார்.
  • 1957 – பல்கலைக்கழகங்களில் இனவொதுக்கலை தென்னாப்பிரிக்க அரசு அங்கீகரித்தது.
  • 1958 – இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் 300 இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
  • 1962 – அமெரிக்காவின் போயிங் 707 விமானம் மிசோரியில் குண்டுவெடிப்பில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 45 பேரும் உயிரிழந்தனர்.
  • 1967 – எகிப்து டிரான் நீரிணையை இசுரேலியக் கப்பல்கள் செல்லத் தடை விதித்தது.
  • 1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் உயிரிழந்து, 150 பேர் காயமடைந்தனர்.
  • 1968 – அமெரிக்க அணு-ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் உயிரிழந்தனர்.
  • 1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்று, பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
  • 1987 – உத்தரப் பிரதேசம், மீரட் நகரில் 42 முசுலிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1987 – முதலாவது இரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் நியூசிலாந்து, ஓக்லாந்து நகரில் நடைபெற்றது.
  • 1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
  • 1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
  • 1992 – பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
  • 2010 – ஏர் இந்தியா எக்சுபிரசு போயிங் 737 மங்களூரில் வீழ்ந்ததில் 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர்.
  • 2011 – அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 162 பேர் உயிரிழந்தனர்.
  • 2015 – அயர்லாந்து குடியரசு உலகின் முதலாவது நாடாக ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.
  • 2017 – மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 2017: அரியானா கிராண்டி இசை நிகழ்ச்சியில் குண்டு வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2018 – தூத்துக்குடி படுகொலைகள்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

  • பிறப்புகள்

  • 1408 – அன்னமாச்சாரியார், இந்து சமயப் பெரியார், கருநாடக இசை அறிஞர் (இ. 1503)
  • 1772 – இராசாராம் மோகன் ராய், இந்திய மெய்யியலாளர் (இ. 1833)
  • 1783 – வில்லியம் ஸ்டர்ஜியன், ஆங்கிலேய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 1850)
  • 1813 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1883)
  • 1844 – மேரி கசாட், அமெரிக்க ஓவியர் (இ. 1926)
  • 1859 – ஆர்தர் கொனன் டொயில், பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1930)
  • 1867 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1946)
  • 1900 – தேவதாஸ் காந்தி, இந்திய விடுதலைச் செயற்பாட்டாளர், காந்தியவாதி (இ. 1957)
  • 1913 – தோப்பூர் சேதுபதி சதாசிவன், இந்திய தாவர நோயியல் நிபுணர் (இ. 2001)
  • 1917 – சுனிதி சௌத்ரி, இந்திய தேசியவாதி (இ. 1988)
  • 1926 – தமிழ்வாணன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1977)
  • 1933 – ஊரன் அடிகள், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், பத்திரிகையாசிரியர் (இ. 2022)
  • 1935 – சி. வி. சந்திரசேகர், தமிழக பரதநாட்டியக் கலைஞர், நடன அமைப்பாளர் (இ. 2024)
  • 1936 – எக்கார்ட் விம்மர், அமெரிக்கத் தீநுண்ம ஆய்வாளர்
  • 1940 – வை. சச்சிதானந்தசிவம், ஈழத்து ஓவியர், எழுத்தாளர் (இ. 2006)
  • 1940 – பி. விருத்தாசலம், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2010)
  • 1944 – வைகோ, தமிழக அரசியல்வாதி
  • 1946 – இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா, உருசிய-உக்ரைனிய வானியலாளர்
  • 1948 – நெடுமுடி வேணு, இந்திய நடிகர்
  • 1954 – சுச்சி நாக்காமுரா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர்
  • 1957 – சீமா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
  • 1959 – மெகபூபா முப்தி, இந்திய அரசியல்வாதி
  • 1984 – டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், முகநூலை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர்
  • 1987 – நோவாக் ஜோக்கொவிச், செர்பிய டென்னிசு வீரர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747863380.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!