திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடிய பிரித்தானியப் பெண்

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் நினைவாக திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடியுள்ளார்.
இங்கிலாந்தின் லின்கன்ஷையரில் உள்ள லோரா கோல்மன்-டே (Laura Coleman-Day) என்பவர், தனது மறைந்த கணவரின் நினைவாக திருமண உடையுடன் லண்டன் மாரத்தானை ஓடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இது அவரது 13வது மாரத்தான் ஓட்டமாகும். 2024ம் ஆண்டு, லோராவின் கணவர் சாண்டர், அக்யூட் லிம்பொபிளாஸ்டிக் லீூகீமியா எனும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட சிக்கலால் உயிரிழந்தார்.
அவரது நினைவாகவும், லியூகீமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக பணம் திரட்டவும், லோரா இந்த மாரத்தானில் பங்கேற்றார்.
சாண்டருடன் 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட லோரா, அவருடைய ஆறாவது திருமண ஆண்டு நாளான அன்று, 26.2 மைல் மாரத்தானின் 23வது மைலில் ஓட்டத்தை நிறுத்தி, திருமண உடையை அணிந்து மீண்டும் ஓட்டத்தை தொடர்ந்தார்.
"இந்த நாளையும், என் கணவரையும் நினைவுகூர இதைவிட சிறந்த வழி வேறு ஒன்றில்லை" என்று லோரா கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



