இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 11 - 04 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
4 months ago

எவ்வளவு அழகிருந்தாலும் பணம் கோடி குவிந்திருந்தாலும்
பலம் பொருந்தி உடலிருந்தாலும்
பக்கத்தில் பாதுகாப்பு இருந்தாலும்
மனம்........
ஆம் உன் மனம்
அலை பாய்ந்தால்
அத்தனையும் வீணே.
தியானம் செய்.
அத்தனையும் உன் வசப்படும்.
கொலை செய்பவன் கூட
தெரியாமலும் செய்வான்.
அவனையும்
மன்னிக்கலாம்.
ஆனால்
குழி தோண்டுபவன்
திட்டமிட்டே செய்கிறான்.
அவனை மறந்தும் மன்னிப்பது தவறு.
மெளனம் கூட சில வேளை
மாலை போடும் அது காலை. மேகம் பாடும் பாட்டோடு
யாகம் செய்ய முடியாது.
தாகம் என்று வந்து விட்டால்
தண்ணீர்தானே கடவுளடா.
பாயும் நீரிடம் கற்றுக்கொள்
உன் வாழ்க்கையை எப்படி வாழ்வதென.
நாளை நமதே
என்பதை
விடுத்து
இன்றே எமது என
முழங்கினால்தான்
தற்காலத்தில் தான் நினைத்ததை அடையலாம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



