வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த வாய்ப்பு!
#SriLanka
#Election
Thamilini
1 year ago
வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனை அறிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்