முதியோர் இல்லத்தில் தீவிபத்து : 11 பேரை மீட்க போராட்டம்!
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இல்லத்தில் சிக்கியிருந்த 44 பேர் இதுவரையில் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் 07 பேர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தத் தீ விபத்தில் மேலும் 11 பேர் தீக்குள் சிக்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காகவும் தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )