பிரித்தானியாவில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்
#Disease
#England
#Virus
Prasu
10 months ago
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோரோவைரஸ் உள்ளவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக NHS புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளால் கடந்த வாரம் சராசரியாக 1,160 மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியுள்ளன.
இது முந்தைய வாரத்தில் 948 ஆக இருந்தத நிலையில் தற்போது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. நோரோவைரஸ் அளவும் 12 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிகமாக உள்ளது.
சராசரியாக 509 படுக்கைகள் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளால் நிரப்பப்பட்டன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்