ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

#America #Warning #Iran #Trump
Prasu
1 year ago
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது, ஈரான் என்னைக் படுகொலை செய்தால் அதை அழிக்க வேண்டும் என்று எனது ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு செய்தால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அங்கு எதுவும் மிஞ்சாது. அணு ஆயுதங்களை உருவாக்கும் விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தம் கொள்கையை மீண்டும் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.

ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் கொள்கையை மீண்டும் அமல்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். 

இது எனக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒன்று. எல்லோரும் நான் கையெழுத்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது ஈரானுக்கு மிகவும் கடினமானது. இதை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை என்று நம்புகிறேன்.

நான் அதை செய்வதில் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் நாம் வலுவாக இருக்க வேண்டும். ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோம், அனைவரும் ஒன்றாக வாழலாம் என்றார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4