உலக எக்ஸ்போ கண்காட்சியை முன்னிட்டு ஜப்பானில் விதிக்கப்பட்ட முக்கிய தடை

#Japan #Smoke #Banned
Prasu
1 year ago
உலக எக்ஸ்போ கண்காட்சியை முன்னிட்டு ஜப்பானில் விதிக்கப்பட்ட முக்கிய தடை

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2022ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற இருக்கிறது. 

இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பராம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளனர்.

ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்தநிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்ததாண்டு முழுவதும் தடை அமலில் இருக்கும் என்றும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4