ஸ்வீடனில் புனித குரானை எரித்த நபர் சுட்டுக் கொலை

#Death #GunShoot #Swedan
Prasu
1 year ago
ஸ்வீடனில் புனித குரானை எரித்த நபர் சுட்டுக் கொலை

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 2023-ம் ஆண்டில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஒரு எதிர்ப்பாளர் குரானை எரித்துள்ளார். 

இத்தகைய செயலை அனுமதித்ததற்காக ஸ்வீடனை பல இஸ்லாமிய நாடுகள் கடுமையாக விமர்சித்தன.

ஈராக்கில் பிறந்த அகதியான சல்வான் மோமிகா என்பவர் முஸ்லிம்களின் புனித நூலை எரித்தார். இந்தச் செயலைத் தொடர்ந்து ஒரு இனம் அல்லது தேசியக் குழுவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. 

 இந்நிலையில், ஸ்வீடனில் மீண்டும் மீண்டும் குரானை எரித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல போராட்டங்களில் குரான்களை எரித்த ஈராக்கிய கிறிஸ்தவரான சல்வான் மோமிகா இன வெறுப்பைத் தூண்டும் குற்றவாளியா என்பதை ஸ்டாக்ஹோம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. ஆனால் சல்வான் மோமிகா இறந்துவிட்டதால் கூடுதல் அவகாசம் தேவை எனக்கூறி தீர்ப்பை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4