தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகளை ஆராய விசேட குழு நியமனம்!

#SriLanka #Jaffna #Hospital #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Nalinda Jayatissa
Thamilini
2 months ago
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகளை ஆராய விசேட குழு நியமனம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று களவிஜயம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 இதன்போது அமைச்சர் அங்குள்ள நிர்வாகத்தினர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடினார்.

 அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சர்,  வைத்தியசாலையில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து தருவதாக உறுதியளித்தார். 

மேலும் இவ் விஜயத்தின்போது  அமைச்சருடன்,  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!