டொனால்ட் ட்ரம்பின் அட்டகாச அடுத்த நகர்வுகள்!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப்பதவியேற்ற முதல் நாளில் தனது ஓவல் அலுவலகத்தில் 26 முக்கிய நிர்வாக ஒப்பந்தங்களில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதில், முந்தைய அதிபர் பைடன் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 78 நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் ரத்து செய்
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என முழங்கிய டிரம்ப், மெக்சிகோ வளைகுடா என்பதை அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்ற வேண்டுமெனவும், வட அமெரிக்காவின் உயரமான மலையான டேனலியை மவுண்ட் மெக்கென்லே என முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் சூட்டப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி கடுமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி அமெரிக்காவின் தேச நலன், கலாச்சாரம், பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பது விசா வழங்குவதிலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதை தடுக்க தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை டிரம்ப் பிரகடனப்படுத்தி உள்ளார். இதற்காக தெற்கு எல்லையில் ராணுவத்தை குவிக்க நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
சீனாவுக்கு சொந்தமான சமூக ஊடக தளமான டிக்டாக்கை தடைசெய்யும் சட்டம் செயல்படுத்தப்படுவதை 75 நாட்களுக்கு நிறுத்திவைக்கும் உத்தரவு ஒன்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
கருத்து சுதந்திரத்தை மீண்டும் வழங்கும் வகையில் அரசு தணிக்கை தடுக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
போதைப்பொருள், மனித கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களையும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
கனடா மீதான 25 சதவீத வரி விதிப்பை வரும் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கும் உத்தரவு கையெழுத்தானது.
அமெரிக்காவில் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் பைடன் மரண தண்டனைக்கு எதிராக இருந்த நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீண்டும் மரண தண்டனை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



