பிரபல ஈரானிய பாப் பாடகருக்கு மரண தண்டனை

#Arrest #Iran #Singer
Prasu
1 year ago
பிரபல ஈரானிய பாப் பாடகருக்கு மரண தண்டனை

ஈரானைச் சேர்ந்த 37 வயது பிரபல பாப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ. உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர் ‘டாட்டாலூ’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்.

இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது உள்ளிட்ட வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் தேடப்பட்ட பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ, 2018ம் ஆண்டில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்தார். பின்னர் துருக்கி போலீசார் அவரை 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதில் தெய்வ நிந்தனை தொடர்பான வழக்கில் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்த வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4