வாஷிங்டனில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

#Protest #America #President #Trump
Prasu
1 year ago
வாஷிங்டனில் டிரம்புக்கு எதிராக  ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் நாளை பதவியேற்கிறார். இந்நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து தலைநகர் வாஷிங்க்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். 

பீப்புள்ஸ் மார்ச் அமைப்புடன் இணைந்து சவுத் ஏஷியன் சர்வைவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே மூன்று போராட்டக்குழுவினர் இணைந்து கோஷங்களை எழுப்பினர்.

நாங்கள் முன்கூட்டியே கீழ்ப்படியவில்லை, பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறோம் என்று பீப்புள்ஸ் மார்ச் தெரிவித்துள்ளது. பெண்கள் உரிமை, சமத்துவம், குடியேற்றம் போன்ற அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் அணி திரண்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர். டிரம்புக்கு ஆதரவளிக்கும் டெஸ்லா நிறுனவர் எலோன் மஸ்க் உட்பட அவருக்கு நெருங்கியவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4