உள் அரங்கத்திற்கு மாற்றப்பட்ட ட்ரம்பின் பதவியேற்பு விழா

#America #President #Climate #function
Prasu
1 year ago
உள் அரங்கத்திற்கு மாற்றப்பட்ட ட்ரம்பின் பதவியேற்பு விழா

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் நாளை அதிபராக பதவியேற்க உள்ளார். 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பதவியேற்பு விழா குறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜனவரி 20ந்தேி கடுமையான குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20ந்தேதி மதியம் 3 மணிக்கு உள்அரங்கத்தில் (Capitol Rotunda) நடக்கிறது.

எந்த வகையிலும் மக்கள் காயப்படுவதை நான் பார்க்க விரும்பவில்லை. பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும் குதிரைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஜனவரி 20ந்தேதி பல மணி நேரம் வெளியில் இருப்பது ஆபத்தான நிலைமையாகும். 

எந்தவொரு நிகழ்விலும் நீங்கள் வர முடிவு செய்தால், பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள். மிகவும் குளிரான காலநிலை காரணமாக பதவியேற்பு உரையை உள் அரங்கத்தில் நடத்த உத்தரவிட்டு உள்ளேன். 

பல்வேறு உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் அரங்கிற்கு அழைத்து வரப்படுவார்கள். இது அனைவருக்கும் மிகவும் அழகான அனுபவமாக இருக்கும் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

40 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் உள்அரங்கில் பதவி ஏற்க உள்ளார். வழக்கமாக கேபிட்டலில் வெளிப்புறத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதிபர் பதவி ஏற்பு விழா நடைபெறும். தற்போது கடும் குளிர் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4