வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாவின் சிறைத்தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

#PrimeMinister #Court Order #Bangladesh
Prasu
1 year ago
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாவின் சிறைத்தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

வங்காளதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா (வயது 79). 

இவர் தனது ஆட்சிக்காலத்தில் ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளையின் பெயரில் அரசாங்க நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 

ஆனால், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்து உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கலிதா ஜியா அப்பீல் செய்தார். 

இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து இன்று உத்தரவிட்டது.

அத்துடன் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4