பிரான்சில் சட்டவிரோத கடற்பயணம் மேற்கொண்ட 76 அகதிகள் மீட்பு

#France #people #Refugee #Rescue
Prasu
1 year ago
பிரான்சில் சட்டவிரோத கடற்பயணம் மேற்கொண்ட 76 அகதிகள் மீட்பு

சட்டவிரோத உயிருக்கு ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டிருந்த 76 அகதிகள் கலே கடற்பிராந்தியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இக்கடற்பயணத்தை பா-து-கலே மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அகதிகள் மேற்கொண்டிருந்தனர். காற்று ஊதக்கூடிய படகு ஒன்றில் குறித்த 76 அகதிகளும் பயணித்திருந்தனர். 

அகதிகளின் கடற்பயணத்தை பார்த்துவிட்டு Préfecture maritime Manche et mer du Nord ஜொந்தாமினர் தகவல் தெரிவிக்க, அவர்களை சட்டவிரோத கடற்பயணத்தை கண்காணிக்கும் சிறப்பு அமைப்பான Cross Gris-Nez அதிகாரிகள் மீட்டிருந்தனர்.

சென்ற ஆண்டு மிக அதிகமான அகதிகள் கலே மற்றும் நோர் மாவட்டங்களின் கடற்பகுதி வழியாக பிரித்தானியா நோக்கி பயணித்திருந்தனர். அதன் போது 76 அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பலி எண்ணிக்கை அதிகரித்தாலும் அகதிகள் தங்களது பயணங்களை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4