உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்கள் வழங்க உறுதியளித்த ஜோ பைடன்

#America #Weapons #Russia #Ukraine #War #Biden
Prasu
1 year ago
உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்கள் வழங்க உறுதியளித்த ஜோ பைடன்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. 

இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அளிக்கிறது.

இதற்கிடையே கிறிஸ்து மஸ் நாளான நேற்று உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் எரிசக்தி கட்ட மைப்புகளை குறிவைத்து 78 ஏவுகணைகள், 106 டிரோன்கள் மூலம் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் இத்தாக்கு தலுக்கு ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலை கண்டிக்கிறேன். குளிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரத்தை துண்டிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

நான் தெளிவாக சொல்கிறேன். உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள். ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும்.

 உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷியாவின் படைகளுக்கு எதிராக, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4